"இலக்கியம் - விமர்சனக் கட்டுரைகள்" என்ற தலைப்பில் முதல்பதிப்பு செய்யப்பட்ட இந்நூலை "கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும்" என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் மறுபதிப்பு செய்கிறது. ஆர்.கே. கண்ணனால் மொழியாக்கம் செய்யப்பட இந்நூலில் சோவியத் எழுத்தாளர்களிடையே கார்க்கி ஆற்றிய சிந்தனைச் செழிப்பானுரை உட்பட அவரது கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வளமான வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் மார்க்ஸிய வெளிச்சத்தில் அவரது இலக்கியச் சிந்தனைகள் இலக்கியவாதிகளுக்கு மட்டுமின்றி வாழ்க்கையை நேசிப்போர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.