இளம் வயதில் தன்னுடைய கல்லூரி நாட்களில் டிரக் எனப்படும் போதை மருத்துவப் பழக்கத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை இது. கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவனாகட்டும், மாணவியாகட்டும் நண்பர்கள் சேர்க்கை என்பது அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைக்கக் கூடியது. நல்ல நண்பர்கள் சேர்க்கையால் படிப்பில் ஆர்வம் தூண்டப்பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேறி, வாழ்வில் உயர்நிலை அடைந்தவர்கள் எத்தனையோ பேர்.