விமர்சனங்களைக் கண்டு அஞ்சி நடுங்கும், விமர்சனங்களைத் தவிர்க்க நினைக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் விமர்சனங்களைத் தேடிப் போய் வாங்கும் எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. நாளடைவில் சாகித்ய அகாடமி விருது வாங்கும் அளவுக்கான படைப்புகளை எழுதிய மேலாண்மையின் அர்ப்பணிப்பு, எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழியே தன்னை ஒரு கதைசொல்லியாக நிலைநிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமர்சன யதார்த்தவாதம், சோஷியலிச யதார்த்தவாதம் என்ற இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் உரத்து நின்று எழுதியவர்.