வான வில்லின் வண்ணங்கள் போல, ஒவ்வொரு கட்டுரையின் எழுத்துப் பாணியும் அமைந்துள்ளது. கட்டுரைகளின் கருத்துச் செறிவும், வழங்கும் முறையும், சொல்லும் திறனும், லட்சிய நிச்சயமும், தமிழர்களுக்குச் செழுமை கொழுமையான புதுமை விருந்தாகும் என்பது எனது உறுதி. இந்த நூலைப் படிக்கையிலெடுக்கும் யாரும் எடுப்பவர்க்கு இலக்கிய ரசனையோ, விடுதலை வேட்கையோ, புத்தம் புது நோக்கோ ஒரு துளி இருக்குமாயின் - ''தைலச் சீசா'' தொடங்கி ''பாரிஸ் கம்யூன்'' முடிய, பத்துக் கட்டுரைகளையும் ஒரேயடியாகப் படித்து முடிக்காதிரார் என்பது எனது துணிபு.