நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘
கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன்
மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.
மலையாலள் நவீனப்
புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கிறது. ஒன்று: அதுவரை முற்றிலும்
மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்து,
தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்த்தும்
ஆழதுமான கதையாடலை அறிமுகம் செய்த்து. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்கு
கொண்டு சென்றது. ஆறம்பகால நாவலாசிரியரான சி.வி.ராமன்பிள்ளைக்கும்
மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகமது பஷீருக்கும் பிறகு
இந்த நாவல் வாயிலாக ஓ.வி.விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்;
புதிய தலங்களுக்கு கொண்டு சென்றார் மூன்று: எதார்த்தத்தின் மீது
மாயங்கள் நிறைந்த கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது. இலத்தீன் அமேரிக்க
இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குச்
சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம் ‘ மூலமாக வெளிபட்டது.