தமிழ்ப் புனைகதையின் களம் குடும்பப் பின்னணியிலிருந்து விலகி பரந்த பின்புலமாக உருப்பெற்று வந்த காலப் பகுதியில் எழுதப்பட்ட நாவல்' புனலும் மணலும்.' சம்பிரதாயமான குடும்பப் பின்னணியும் அதன் சிக்கல்களும் இந்த நாவலிலும் உண்டு. ஆனால் அந்தச் சிக்கல்கள் மட்டுமே நாவலின் மையமல்ல... இந்நாவலின் மீது சொல்லப்பட்ட விமர்சனங்களைப் பின் தள்ளிவிட்டு 'புனலும் மணலும்' நாவல் இன்று சமகாலத்தன்மையுடன் நிலைத்திருக்கிறது.