சுதந்திரப் போராட்ட வீர்ராக, தியாகியாக, அஹிம்சாவாதியாக நாம் தேசபிதாவை அறிந்திருக்கிறோம். ஆனால், சாதாரண மனிதராக, குடும்பத் தலைவராக இருந்த காந்தியின் மறுபக்கம்.. வியப்பூட்டுகிறது!
தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கென கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து காட்டிய காந்தித மகானின் வைராக்கியம், நாம் அறிந்துகொள்ள வேண்டியது மட்டும் அல்ல... நம் சந்ததிக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதும்கூட.
தாய், தன் மகனுக்குச் சொல்லும் கதைகளாக இவை இருப்பதால், வரலாற்று நிகழ்வுகளும் வசீகரமாக உள்ளன.
காந்தி மகானின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடக்கிய சுவையான கதைகளின் அணிவகுப்பே இந்த நூல்!