நெகிழ்வுகளால் நிரம்பியது இந்த நூல். இதில் பதிவு செய்யப்பட்ட மனிதர்கள்,
நமது தாத்தா,அப்பா காலத்தவர்கள். நமது உணர்வுகளோடு கரைந்து போனவர்கள்.சமூகத்தின் இழைகளில் நேசத்தின் மின்னல்களாக என்றும் மின்னுபவர்கள். இந்த நூலிலுள்ள கட்டுரைகள் எல்லாமே மனிதத்தை அடிப்படையாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளன. இந்த நூலிலுள்ள ஒரு பூனையின் கதை கூட இதயத்தைப் பாரமாக்கி தூக்கத்தை விலக்கி வைக்கும்.
நாயின் உண்ணாவிரதம் நம்மை கலங்கடிக்கும். இந்த நூலின் தமிழ், ஒரு இலக்கிய ஆச்சரியம். இதுவரை இலக்கிய உலகம் அறியாத தேன் சுவை மிகுந்த எழுத்து. படிப்பவர்கள், ‘வரும் சந்ததினருக்கும் பயன்படும்’ என இந்நூலைப் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.