இவரது
ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த
நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும்
பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது 'கேட்ட வரம் '
நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசீர்வதித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவரது 'மாற்றாந்தாய் ' சிறுகதைக்கு 'ஜகன் மோகினி'
இதழில் சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப்
பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள்
எழுதியுள்ளார்.