தைத் திங்கள் முதல் நாள் தமிழர் போற்றும் பெருநாள் பொங்கல் திருநாள். பழையன கழிய புதியன புகுத்த போகி, புத்தரிசியில் புது பானையில் பொங்கல், பால் கொடுக்கும் தேவதைக்கு பசும்பொங்கல், தமிழர்க்கு குறள் தந்த வள்ளுவனுக்கு ஒரு நாள், என்று வரிசையாய் நல்ல நாள். அனைத்தும் பண்டிகை நாள். அனைவரையும் கொண்டாடும் நாள். அனைவரையும்? அனைவரையும்? ... இல்லையே, எங்கோ இடிக்கிறதே, முக்கியமான எதையோ விட்டிருக்கிறோமே...
நாடு நலம் பெற இந்திரன் காரணமில்லை என்று உண்மை உணர்ந்து கோவர்தன மலைக்கு பூஜை செய்தான் கிருஷ்ணன். அவன் வகுத்த பாதையில் வாழும் நாம், அவன் உரைத்த கீதையை வணங்கும் நாம், பூஜைக்குரிய முதன்மையானவரை விட்டு விட்டோமே!!