இரவு
தோறும் பூக்கும் கனவுகள் உன்னைப் பற்றியதாகவே இருக்கின்றன ஒரு நாள் கனவு
வராது போனாலும் என் அன்பின் அளவு குறித்து கவலை கொள்கிறது மனசு காதலற்ற,
காதல் கவிதைகளற்ற இந்த உலகத்தை, கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
இந்தப் புவியச்சு இயங்குவதே பேரண்டத்தின் மீது கொண்ட
பெருங்காதலால்தான்.தன் உள் மன உணர்வுகளை, காதலை, கண்ணரை, காயத் தை,
மகிழ்வை, முத்தத்தை, பிரிவை, பேரன்பை தொடுத்துத் தொடுத்து ஒரு மாலையாக்கித்
தந்திருக்கிறார், லலிதா. இது பிரியங்களின் நிறமாலை, சமூகத்தின் மீதான
அவரது பார்வையிலும் காதலும் அன்புமேஇழையோடுகிறது.இந்த மாலை முடிவுறாமல்
தொடரட்டும்.முன்காலை நேரத்து இத மழையில் நனைந்த பவழமல்லியாய் மணம் பரப்பும்
இம் மாலையை , எதிர்வரும் காதல் சந்ததியினருக்கு சூட்டுவோம்.அவர்கள்,
அவர்களின் சந்ததியினருக்கு.