
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
காதல் கவிதைகள் மட்டும் படிக்க சுகமாக காரணம். சலிப்பே வராது. காரணம்
காதல் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை
மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு.
நூல் ஆசிரியர் பெயரிலேயே அன்பு இருப்பதால் அன்பைப் பொழிந்து காதல் கவிதை
வடித்துள்ளார். பதிப்புரை நன்று. திரு. அன்பு இராமகிருஷ்ணன் சு. (ஊத்துக்குளி)
அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக வரவேற்கின்றது.
காதலி அருகில் இல்லாவிட்டாலும் காட்சிக்கு வராவிட்டாலும் அவள் பற்றி
நினைவு ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். அதனை உணர்த்திடும்
புதுக்கவிதை நன்று.
காதலின் அடுத்தக் கட்டம், கூடல், தீண்டல், அணைப்பு. உணர்ந்தவர்கள்
மட்டும் உணரும் உண்மை உணர்வு காதல்.