காதல் என்று சொல்லும்போது
மனசுக்குள் மகிழ்வு நிறைகிறது எனக்கு
எனத்தனை விதமான சந்தோசம்
எத்தனை அற்புதமான ஆனந்தம்
உலக மொழிகளிலுள்ள ஒட்டுமொத்தச் சொற்களும்
காதல் என்றால் கவரி வீசிகிறது.
பூக்களிலுள்ள தேனைப்போல
பூக்களிலுள்ள வாசனைப்போல
பூக்களின் மென்மையைப்போல்
காதலும் இனிப்பாய், இனிமையாய், இளமையாய் இருக்கும்
காதலைப் பற்றி எழுதும்போது எனக்கு
வாலிபத்தின் வாசலில் ஊஞ்சல்கட்டி ஆடுகிற ஆட்டமும்
வாலிபத்தின் காத்திருப்பிலுள்ள இறக்கை கட்டிய சடுகுடு ஆட்டமும்
இப்படிக்கு காதல் என்குற இக்கவிதைத் தொகுப்பில் என்னை ஆடா வைத்தசந்தோசத்தைப் பகிரிந்துகொள்கிறேன் வாசிக்கும் உங்களோடு.காதலில் சுகத்தை சோகத்தை, வலியை ,வலிமையை வசந்தத்தை இன்னும் இன்னும் அனுபவித்த நேரத்தையெல்லாம் கவிதைத் தேரில் ஏற்றி கலையாய் இழுத்து வந்திருக்கிறேன்.
சி.சிவா.