பெண் நேயம் மாந்த நேயமன்று. அது உயிர் நேயம். பூனை நேயம். நாய் நேயம். செடி
நேயம். கொடி நேயம். புழு நேயம். காக்கை குருவி எங்கள் சாதி என்கிற பாரதி
நேயம். அழகின் சிரிப்பு கண்ட பாவேந்தன் நேயம் அதுவே ஆதி ஆதி ஆதி மழைநேயம்.
அதுதான் புளியந்துவையல் அரைப்பதைத் தடுக்கிறது. அணிலின் வீட்டிற்காகவும்
பறவையின் கூட்டிற்காகவும் பதைபதைக்கிறது. நெல் தேடும்
சிட்டுக்குருவிகளுக்காக கரிசனப்படுகிறது. தாமரை மொட்டுகள் பறிப்பவனைப்
பார்த்துச் சபிக்கிறது. கன்றின் அழுகுரலிலும் மழைக்குரலே கேட்கிறது.
இராமாயணத்திற்குள்ளும் சூழலியல் சிந்தனையோடு மறு வாசிப்பு செய்து,
காட்டிற்காகப் பெய்கிறது லலிதாவின் அறிவு மழை பெண் மழை மழை பெண். எல்லா
மாசுகளையும் பெண்மழையே கழுவும். இந்த மழை வானத் தும்பிகளும் அதற்கே
பயன்படும்.