நவீன கவிதைக்குள் பேசத் துணியும் எந்த விஷயத்தையும் மரபுக் கவிதையிலும்
கூறமுடியும் என்பதற்கு கே.ஆர்.பாபுவின் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள
மரபுக் கவிதைகள் ஓர் உதாரணம்.கோவையில் வானம்பாடிகளைத் தொடர்ந்துஎண்பதுகளில்
கவிதை எழுதத் தொடங்கி யர் பாபு, கவிதை குறித்த இவரின் பார்வையும், குரலும்
தனித்துவமிக்கது. இவரது கவிதைகள் சமூக அவலங்களுக்கு எதிரான புகார்களாகவோ,
அறிக்கைகளாகவோ இல்லாமல் பிரகடனங்களாக வெளிப்படுகின்றன. அலைக்கழிக்கப் பட்ட
வாழ்வின் துயரங்களையும் மனித மனங்களில் நிலவும் அந்நியத்தையும் ஜீவனுள்ள
கவிமொழியில் எதார்த்தமான அழகிய தன்மையோடு வெளிப்படுத்துகிறார்.