காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூயின் தமிழ்த்துறையினர் உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் 'உரைநடைப் பூக்கள்' என்னும் இந்நூலைத் தொகுத்தளித்துள்ளனர். சங்க இலக்கியம், சிற்றிலக்கியம், இன்றைய இலக்கியம் எனப் பல்வேறு பொருள்களில் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். பெண்ணியம், அமைப்பியல் என்னும் புதிய துறைகளிலும் இக்கட்டுரைகள் அரிய செய்திகளைத் தருகின்றன.
இளைய தலைமுறையினர் புதிய கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவும், அதே சமயத்தில் பண்டை இலக்கியங்களின் பாடுபொருள்களை அறிந்துகொள்வதற்குத் துணையாகவும் இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.