" பேராசிரியர் இரா. தெய்வம் அவர்கள் “சங்க இலக்கியங்களில் ஓரெழுத்தொருமொழி” என்னும் இந்நூலை படைத்தளித்துள்ளார். அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களிலிருந்தும் நான்கு இயல்களில் ஓரெழுத்தொரு மொழிகள் கையாளப் பட்டுள்ளதை விளக்கிக் கூறியுள்ளார்.
இலக்கியங்களில் ஓரெழுத்தொரு மொழிகள் எந்தப் பொருள்களில் எல்லாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
"