தென்னாடுடைய சிவன் எந்நாட்டவராலும் இறைவன் எனப் போற்றித் துதிக்கப்பெறுகிறான். சிவநெறி தொன்மையானது. திருநெறி, நன்னெறி, சன்மார்க்க நெறி என்றெல்லாம் பெரியோரால் பாராட்டி உணர்த்தப் பெறுவது; தத்துவ அடிப்படையில் உலகத்தில் நிலவும் கடவுட் கொள்கைகள் அனைத்தையும் தன்னுள் அகப்படுத்தித் தழுவிக் கொள்ளும் சமயாதீதப் பொது நெறி.