" பதினெட்டாம் நூற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலேற்றப்பட்டு, அமெரிக்காவுக்குச் சென்றதைப் போல, தமிழ் மக்களும் கூலி வேலைக்காக, குறிப்பாக, தோட்டங்களில் பணியாற்ற இலங்கை, மலாயா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட இந்தத் தமிழர்கள் மலேயாவில் தங்கள் உழைப்பை அர்ப்பணித்து, அந்த நாட்டினை எப்படி மேம்படுத்தினார்கள், இவர்கள் எவ்வாறு சீர்குலைந்தார்கள், அந்தச் சீர்குலைவுக்கு இனவாதம் எப்படி காரணமாயிற்று என்று விளக்குகிறது - ‘புலம் பெயர்ந்த தமிழர்கள் - மலேசியா’என்னும் இந்த நூல்.
மலேசியக் காலனியப் பொருளியலில் தமிழர்களின் பங்களிப்பை விரித்துக் கூறும் இந்நூல், தமிழ்ச் சமூகம் கற்க வேண்டிய வரலாற்று ஆவணம்.
"