book

சாணக்கியரும் சந்திரகுப்தனும்

Sanakkiyarum Chandrakuptharum

₹256.5₹270 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ்.பி. ஐயர்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :538
பதிப்பு :5
Published on :2009
ISBN :9788183793322
Add to Cart

சாணக்கியர் தென்னாட்டவராக்த்தான் இருந்திருக்க வேண்டும். 'திரமிளர்' என்று அவருக்கு வழங்கும் பெயரே அவர் 'தமிழர்' என்பதைக் காட்டுகிறது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஆந்திர சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி பெறுகிறவரை 'திரமளர்', 'திராவிடர்' என்றால் தமிழரையே குறிக்கும். இப்போதும் ஆந்திரர்கள் தமிழரைத் 'திராவிடர்கள்' என்றே சொல்வார்கள். அர்த்த சாஸ்திரத்தைக் கவனித்தால் தென்னாட்டைப்பற்றிய பல விவரங்களை அதில் காணலாம். குமாரன், குமரி என்ற தெய்வ வழிபாடு அவசியம் என்று அதில் குறித்திருப்பதைக் கண்டால், சாணக்கியர் கன்னியாகுமரியருகில் தோன்றியவராக இருக்க வேண்டும் என்பது புலனாகும். இப்போது கொச்சிப் பிராந்தியத்திலுள்ள பல மலைகளையும் ஆறுகளையும்பற்றி அதில் குறிப்பிடப்பட்டியிருப்பதைக் கவனித்தால் அவர் முசிரி அல்லது முயிரிக்கோடு (கொடுங்கோளூர் என்று வழங்கப்படும் ஊர்) என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியும். அந்தக் காலத்தில் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊர்; தமிழ்ப்பண்புக்கு நிலைக்களமாகவும் இருந்தது.