book

சிகரம் தொடுக

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளங்கதிர் உதயணன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465648
Add to Cart

வாணிபம், வியாபாரம் - இவை இரண்டுமே நீங்கள் அடிக்கடி கேட்டு, பழகிய வார்த்தைகள். இரண்டு சொற்களுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஆனால் ஒரே அர்த்தத்தை தரக்கூடியவை அல்ல. வாணிபம் என்ற சொல் வியாபாரம் என்ற வார்த்தையைக் காட்டிலும் விரிவான பொருளைத் தருவது.வியாபாரம் என்பது பொருட்களை வாங்குவதும் விற்பதும், ஆகிய செயல்களைக் குறிப்பதாகும்.
வாணிபம் என்பதோ வாங்குவது விற்பது மட்டும் அல்லாமல், அதன் தொடர்புடைய எல்லா நடைமுறைப் பணிகளையும் நல்ல முறையில் செய்து, பொருட்கள் தங்கு தடையில்லாமல் எப்போதும் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே நல்ல உறவு, உண்டாக்குவது ஆகிய பணிகளையும் இணைத்து ஒன்றாகச் செய்வதாகும்.வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களே வியாபாரிகள். உலகில் மிகவும் பழமையானதும் - இன்றும் நிலைத்து, நாளையும் | தொடர்ந்து நிலைத்து நிற்கப் போகும் ஒரு உயர்ந்த தொழில் வியாபாரம். இந்த வியாபாரத் தொழிற்சக்கரம் சரிவரச் சுழன்று கொண்டிருந்தால்தான் மக்கள் வாழும் இந்த பூமியாகிய உலகம் சரியாகச் சுற்றும். இது மறுக்க முடியாத உண்மை .உலகத்தை வாழ்விக்கின்ற காரியத்தை மேற்கொண்டு பணி, செய்யும் வியாபாரிகள் வியாபாரக் கலையை - அதன் நுட்பங்களையும், வழிவகைகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கினால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் - அதன் வெற்றியின் சிகரங்களை நிச்சயம் எட்டிப்பிடிக்க முடியும்.