book

கிருஷ்ண விஜயம் (பாகம் 1)

Krishna vijayam(part 1)

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் வாலி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780333
குறிச்சொற்கள் :பிரார்த்தனைகள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
Out of Stock
Add to Alert List

நமது பாரத நாட்டின் பொக்கிஷங்களான இதிகாசங்களும் புராணங்களும் காலக் கண்ணாடியாக நின்று, மனித வாழ்க்கைக்கான நியதிகளையும் பாதைகளையும் வகுத்துத் தருகின்றன. இந்திய பாரம்பரிய தத்துவங்கள் மட்டுமின்றி, இலக்கியச் சுவையுடன் கூடிய சுவாரசியமான சம்பவங்களும் புதைந்து காணப்படுவதுதான் அவற்றின் சிறப்புக்கு முக்கிய காரணம்.
இத்தகைய சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள காவியங்களில் ஒன்றான மகாபாரதத்தில், உள்ளம் கொள்ளை கொள்ளும் வல்லமையுடன் திகழ்பவன் கண்ணபிரான். அந்தக் காவிய நாயகனை அனைவரின் கண்முன்னே மீண்டும் விஜயம் செய்விப்பதற்காக படைக்கப்பட்டதே 'கிருஷ்ண விஜயம்.'

தமிழ் சினிமாவின் கவிதை உலகில் மார்க்கண்டேயராக வலம் வரும் கவிஞர் வாலி, தனக்கே உரிய பாணியில், அனைவரும் இலக்கியத்தின் இன்பத்தை சுவைக்கும் வகையில் இக்காவியத்தைப் படைத்துள்ளார். அவரது கணக்கிலடங்கா எதுகை, மோனைகள் அனைத்தும் வாய்விட்டுப் படிப்பவர்களின் நாவுக்கு அமுது படைக்கிறது. கவிஞர் வாலியின் சொற்களஞ்சியமாகத் திகழும் கிருஷ்ண விஜயம், அவரை இலக்கிய புலமைமிக்கவராக நம் மனங்களில் உயர்த்திப் பிடிக்கிறது.

'காவியம் படைத்த பின் ஓவியம் தீட்டப்பட்டதா?! ஓவியம் தீட்டிய பின் காவியம் படைக்கப்பட்டதா?!' _ மணியம் செல்வத்தின் கதை சொல்லும் உயிரோவியங்களால்தான் இந்த பிரமிப்பு! 'ஆனந்த விகடன்' மூலம் வாரம்தோறும் வாசகர்களின் இல்லத்துக்கு விஜயம் செய்த கிருஷ்ணன், இப்போது முழுவதுமாக உங்களிடத்தே குடிகொள்ள வந்திருக்கிறான் _ புத்தக வடிவில்!

உள்ளத்தை மயிலிறகால் வருடிச் செல்லும் காவியமான கிருஷ்ண விஜயத்தின் இரண்டு பாகங்களையும் படித்து சுவைத்து, ஆனந்தக் களிப்படைவீர்!