அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா
Anu Minsaram: Avasiyama? Aabaththa?
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரேஸ்வர பாண்டியன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184937480
Add to Cart "ஒரு பக்கம் கூடங்குளம் போராட்டமும் இன்னொரு பக்கம் மின்சாரப் பற்றாக்குறையும் நம்மை
உலுக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அணு மின்சாரம் பற்றிய ஆழமான அறிவியல் பார்வை
அவசியமாகிறது.
அணு மின்சாரம், அணு ஆற்றல் என்றதுமே அச்சமும் பதற்றமும் நம்மைத்
தொற்றிக்கொண்டுவிடுகிறது. செர்னோபில்லும் ஃபுகுஷிமாவும் கண்முன் விரிகின்றன. இந்த
அச்ச உணர்வைப் பலப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் மிகத் தீவிரமாக அணு மின்சாரத்துக்கு
எதிராகப் பிரசாரமும் செய்துவருகின்றனர். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், அறிவியலாளர்கள்,
அரசியல்வாதிகள் என்று ஒரு பெரும் கூட்டமே இதில் அடக்கம்.
அணு மின்சாரம் இந்தியாவுக்கு ஏன் தேவை என்பதை ஆணித்தரமாக இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.
இதுவரையில் இந்தியாவால் ஏன் அதிக அணு மின்சாரத்தை உருவாக்க முடியவில்லை, ஏன் அணு
மின்சாரம் ஒன்றால்தான் த்தமான அதே சமயம் அதிகமான மின்சாரத்தைத் தரமுடியும், போன்ற பல
உண்மைகளை அடிப்படைத் தகவல்களுடன் அலசி நம் முன் வைக்கிறது இந்தப் புத்தகம்.
ஒரு தரப்பு வாதமாக மட்டுமின்றி, அணுக் கதிர்வீச் ஆபத்தானதா, கதிர்வீச்சில் எது உண்மையான
அபாயம் கொண்டது, அதனை அணு சக்தித் துறை எப்படிக் கையாள்கிறது, செர்னோபில்லில் நடந்தது
என்ன, ஃபுகுஷிமாவில் நடந்தது என்ன என்று எதையும் மறைக்காமல் இந்தப் புத்தகம் விளக்குகிறது.
ஆதரவு, எதிர்ப்பு என்று உங்கள் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், கற்பதற்கும் விவாதிப்பதற்கும்
ஆச்சரியப்படுவதற்கும் பல விஷயங்கள் இதில் உள்ளன."