book

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம்

Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளங்கோ கண்ணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184764352
Add to Cart

மாறிவரும் இந்த வியாபார உலகத்தில் வெற்றி அடைய, கார்ப்பொரேட் நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்றபடி தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெறுவதுபோல், நிர்வாகத்திலும் சீரமைப்புகளைச் செய்து வெற்றிபெறும் பாடத்தைக் கற்றுத்தருகிறது இந்த நூல். இந்தியாவில், புதிய புதிய பொருளாதார மண்டலங்கள் உருவாகிவரும் இந்தச் சூழலில், நிர்வாகிகளுக்கு நவீன உலகத்தை அறிமுகப்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கவும், ஊழியர்களை வழிநடத்தவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றலை வளர்க்கவும் கற்றுத் தர வேண்டியுள்ளது. தலைமைப் பண்பை வளர்ப்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். இப்படிப்பட்ட தலைமைப் பண்பை, கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எளிய முறையில் கற்றுத் தந்திருக்கிறார்கள், இந்த நூலின் எழுத்தாளர்கள் அனிதா போக்லே & ஹர்ஷா போக்லே. எதிர்ப்புகளை முறியடிக்க முடியாமல் திணறும் நிறுவனத்தை அல்லது வியாபாரரீதியாக நொடிந்து கிடக்கும் நிறுவனத்தை எப்படி மேலே கொண்டுவருவது என்பதை, ரன்கள் குறைந்து தோல்வி முகத்தில் இருக்கும் அணியின் கேப்டன், எப்படி தனது வீரர்களுக்கு புதிய வியூகம் அமைத்துக் கொடுத்து நம்பிக்கையோடு அணியின் வெற்றிக்காகப் பாடுபடுகிறாரோ... அந்த உண்மையான உதாரணத்தை எடுத்துக் காட்டி உணர்த்தி இருக்கிறார்கள். ‘தவறுகளைத் திருத்தி நேர்ப்படுத்துவதும், சாதனைகளை மதித்துப் போற்றுவதும் நிறுவனத்தின் வெற்றியை உறுதி செய்யும்’ என்று நம்பும் லீடர்களுக்கும்... ‘சோர்வு, துக்கம் ஆகியவற்றைத் துடைத்தெறிந்து, பழகுதிறனை மேம்படுத்தினால் வெற்றி நிச்சயம்’ என்று நம்பும் லீடர்களுக்கும்... இந்த நூல் பெரும் அளவில் உதவி செய்யும்; வெற்றியின் வலிமையைப் புரிய வைக்கும்!