book

பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்

Pandaiya Indiayavin Muripokum Pirapokum

₹265+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஜி. சர்தேசாய்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :343
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422060
Out of Stock
Add to Alert List

டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலயத்தில் பிராமிக் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தவர். முதன் முறையாக இந்திய நாணயங்களை அறிவியல் அடிப்படையில் கால நிர்ணயம் செய்தார். இவரது நாணய ஆராய்ச்சிகளே இந்தியாவில் நாணய இயல் (Numismatics) ஒரு தனிப்பாடமாகத் தகுதி பெற உதவியது. இன்றுள்ள நினைவுச் சின்னங்கள், அகழ்வுச் சான்றுகள், சமூகப் பழக்கவழக்கங்கள், பூர்வகால எச்சங்கள், பழங்குடி மரபுகள் ஆகியனவற்றையெல்லாம் நிகழ்காலப் பிரக்ஞையுடன் அணுகி பண்டைய இந்திய நாகரிகம், பண்பாடு குறித்த கேள்விகளுக்கு இவர் வழங்கியுள்ள விடைகள் பலரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியப் புராணங்களை ஆராய்ந்து வரலாற்றை அறிவியல் பூர்வமான சமூக இயலாகவும் மானுட இயலாகவும் இவர் விளங்கவைத்த சாதனை மகத்தானது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு துறையிலும் தன் முத்திரையைப் பதித்த தாமோதர் தர்மானந்த் கோசாம்பி 1966ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி 58 வயது நிறைவாகுமுன்பே உறக்கத்திலேயே உயிர் துறந்தார். இவர் மறைவுக்குப் பின்னர் இவருடைய அறிவியல் சாதனைக்காக இந்திய அரசு Posthumus Award வழங்கியது. இவர் மறைவுக்குப் பின்னர் வெளிவந்த "Indian Numimatics" (1981); "D.D. Kosambi on History and Society; Problems of Interpretation" (1985); "Science, Society & Peace" (1986) - ஆகிய மூன்று நூல்களும் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன.