book

அடிக்கற கைதான் அணைக்கும்

Adikara Kaithaan Anaikkum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதா கணேசன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

அடிக்கிற கைதான் அணைக்கும் - சங்க காலத்தில் காதலும் போரும் வாழ்க்கையாக இருந்தன. அகமும் புறமுமே இலக்கியம். பக்தி இலக்கியம் தழைத்த இடைக்காலத்தில் காதலுக்குத் தெய்வீகச் சாயம் பூசப்பட்டது. ‘தெய்வீகக் காதல்' என்றார்கள். 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்று கூறினார்கள். திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப் படும் இந்தக் காலத்தில் காதல் என்பது கத்தரிக்காயை விட மலிந்து விட்டது. படிக்கவும், வேலை பார்க்கவும் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே 'வண்டு'களுக்குக் கொண் டாட்டமாகி விட்டது. செலவு இல்லாத ஒரு பொழுதுபோக்காகக் காதல் ஆகிவிட்டது. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான். வண்டுகள் தேன் குடித்து விட்டுப் பறந்து விடுகின்றன. வண்டு களுக்கு மஞ்சம் விரித்ததன் விளைவுகளை மலர்ச் செண்டுகளே அனுபவிக்கின்றன. இந்த அவலமான நேரத்தில் காதலர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், பறந்து போகும் வண்டுகளை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதையும் இந்தப் பெருங்கதையில் கூறியிருக்கிறேன். பெண்கள் படித்துப் பயன்பெற வேண்டிய கதை இது.