book

சக்தி தரிசனம் பாகம் 1

Shakthi Tharisanam(part 1)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஷ்யபன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :175
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன்.
ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட்டுரைகள், ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

பிறகு வந்த நாட்களில், 'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களைத் தொடர்ந்து ஒதுக்குங்கள்... திருத்தலங்களின் அருமை பெருமைகளை விளக்கும் விரிவான கட்டுரைகள் விகடனில் வெளியானால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்கிற ரீதியில் வாசகர்களிடமிருந்து எண்ணற்ற கடிதங்களும் எங்களுக்கு வந்தன.

ஆன‌ந்த‌ விக‌ட‌னில் 'ச‌க்தி த‌ரிச‌ன‌ம்' என்ற‌ த‌லைப்புட‌ன், அம்ம‌ன் அர‌சாட்சி செய்யும் கோயில்க‌ளை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு எழுத‌லாம் என்று தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. பொதுவாக‌வே க்ஷேத்ராட‌ன‌ம் என்ப‌து, இன்றைய‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுட‌ன் இர‌ண்ட‌ற‌க் க‌ல‌ந்துவிட்ட‌ ஒன்று. ம‌ன‌தில் ப‌க்தி சிர‌த்தையுட‌ன், குடும்ப‌த்தில் அமைதி வேண்டி அநேக‌ம் பேர் ப‌ய‌ண‌ப்ப‌டுகிறார்க‌ள். இவ‌ர்க‌ளை ம‌ன‌தில் வைத்தே இந்த‌க் க‌ட்டுரைத் தொட‌ர் திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌து.

ஒரு கோயில் என்றால், அத‌ன் பூர்வீக‌ வ‌ர‌லாறு, சிற‌ப்புக‌ள், அங்கு இருக்கும் செள‌க‌ரிய‌ம், அசெள‌க்ரிய‌ம் போன்ற‌வை 'ச‌க்தி த‌ரிச‌ன‌'த்தில் வெளியான‌து. காஷ்ய‌ப‌னின் தெளிவான‌ க‌தை சொல்லும் போக்குட‌ன் அமைந்த‌ எழுத்து, வாச‌க‌ர்க‌ளை ஒவ்வொரு ஆல‌ய‌த்துக்கும் நேரிலேயே அழைத்துச் செல்வ‌து போல‌ ஒரு சுக‌ம் த‌ந்த‌து. ஜெ.பிர‌பாக‌ரின் ஓவிய‌ங்க‌ள், அந்த‌க் கோயில் சூழ்நிலைக்கே வாச‌க‌ர்க‌ளை அழைத்துச் சென்ற‌ன‌.

ச‌க்தி த‌ரிச‌ன‌ம் தொட‌ரில் வெளியான‌ அத்த‌னை கோயில்க‌ளையும் ஒரே புத்த‌க‌த்தில் வாச‌க‌ர்க‌ளுக்குக் கொடுப்ப‌து என்ப‌து இய‌ல‌வில்லை. என‌வே, முத‌ல் ப‌குதி இப்போது வெளியாகியுள்ள‌து.

ச‌க்தி த‌ரிச‌ன‌ம் செய்ய‌ப் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ நூல் ப‌ய‌னுள்ள‌ ஒரு 'கைடு' மாதிரி அமையும் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு உண்டு.