book

பற்றி எரிகிற பனி நதிகள்

Patri Erikira Pani Nathikal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வலம்புரி ஜான்
பதிப்பகம் :நெய்தல்வெளி
Publisher :Neithalveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :2
Published on :2018
Add to Cart

பேச்சு... எழுத்து... இவற்றை பேச்சு எழுத்து என்று பாராமல் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் நிகழும் வேள்வி... விளைத்தல் என்று அதை நினைப்பது ஒரு உன்னதச் சிந்தனை. 1970-80 களில் தன்னை சுற்றி நிகழ்ந்த கருத்துச் சிறப்புகளையும், கருத்து முரண்களையும் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அணுகிய முறை இன்று நமக்கு பாடமாக அமையலாம். அவருடைய எழுத்தில் சந்தணமும் உண்டு, கந்தகமும் உண்டு. சள்ள மீனும் உண்டு, கொட்ட நண்டும் உண்டு. அமைதி நீரோடையும் உண்டு, ஆவேசமான காட்டாறும் உண்டு. வார்த்தை சித்தரின் ஆழ்மனதின் ஆழங்களையும் உயர்சிகரங்களின் உன்னதங்களையும் நாம் காணலாம். அக்காலகட்டத்தில் பலருக்கு அவர் எழுதிய ஆழமான கடிதங்களும் அவர் மனதைத் தொட்ட சில புத்தகங்களுக்கான விமர்சனப் பதிவுகளின் தொகுப்பே இந்நூல். அழகான கவிதையை விட ஆழமான சிறந்தது. உண்மையை தேடுவதை விட சிறந்த இலக்கியம் இல்லை. கடிதங்கள் உண்மையை கண்டறிகிற வடிகால்கள் - வாய்க்கால்கள் உங்களது கண்களைக் கௌரவப்படுத்தப் போகிற இந்தக் கடிதங்கள் நான் நேசிக்கிற, என்னை நேசிக்க இயலாத சிலருக்கு எழுதப்பட்டவை. அலசப்பட்டுள்ள விவகாரங்கள் பொதுவானவை. நீதிபதிகளே, உங்கள் தீர்ப்பிற்காக திசைகளின் திருப்பத்தில் என் விழிகளை உயர்த்துகிறேன்.