book

ஆசனங்கள் ஐம்பது

Aasanankal Impathu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிரேசி படைத்தலைவர்
பதிப்பகம் :நெய்தல்வெளி
Publisher :Neithalveli
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

சுவாசம் ஆரம்பித்தவுடன்தான் உலகின் அனைத்து சிசுக்களும் அழுகின்றது. எழுகின்றது. இந்த சுவாச மானது இறக்கும்வரை மனித உடலில் தங்கியிருக் கிறது. காற்று வெளியேறியவுடன் உயிர்க் காலம் முடிந்து விடுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று பிரதானமாக நம்மை இயக்கி வாழவைக்கிறது. உடலுக்கு தேவையான சூட்டைக் கொடுத்தும், இரத்த ஓட்டத்தைக் கொடுத்தும், பிராணச் சக்திகளை கொடுத்தும் நம்மை இயக்குகிறது. 'அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்' என்ற கூற்றுப்படி, அண்டத்திலுள்ள சகலவிதமான சக்திகளும் பிண்டமாகிய மனித சரீரத்தில் சுவாசக் காற்று மூலமாக பரவி ஆயுள் பரியத்தம் முழுவதும் நோயின்றி வாழவைக்கிறது. பஞ்சேந்திரிய புலங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை வாயிலாகத்தான் தொடுதல், நுகர்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல் என்ற ஐந்து செயல்களை செய்ய முடிகிறது. இச்செயல்கள்தான் சரீரம் வழியாக உலகை காண வைக்கிறது. வாழ வைக்கிறது. உடலின் அகப்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மையாகவும் சீராகவும் வைத்திருக்க நமது மிகப்பெரும் மானுடக் கொடையே ஆசனங்கள் எனலாம். அந்தக் காலத்தில் பெண்யோகிணி 'யாரும் இல்லை இல்லை' இப்போது யோகினி நிறைய உள்ளனர் இன்றைய மனிதனுக்கு 100 ஆசனம் வரை பயிற்சி செய்ய முடிகிறது. நாம் முடிந்தவரை செய்யலாம். தினமும் 20 ஆசனம் செய்தாலும் போதுமானது. யோகாசனம் செய்பவர்கள்.. மகாபுருஷன், மகான், புருசோத்தமன், பரமஅம்சர், தேவஞானி, மகாத்மா, பரமயோகி, குருஜி, சுவாமிஜி, தீரர், சித்தவித்யார்த்தி, பிரம்மஸ்ரீ என்றெல்லாம் பெயர் பெறுகின்றனர். இந்நூலின் வாசிப்பு மூலம் நீங்களும் மேற்கூறிய வண்ணமே திகழ்ந்தீர்களானால் இப்பிறவியின் முழுபயனை யும் அடைய இந்நூல் ஒரு கருவியாக அமையும் என்பதை நம்புகிறேன்.