
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
Kalvaanar N.S.Kriishnan
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செவல்குளம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184762204
குறிச்சொற்கள் :திரைப்படம், பொக்கிஷம், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், சரித்திரம்
Out of StockAdd to Alert List
‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன்! நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘சிரிப்புமேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் விமரிசனம் செய்த மேதை அவர். ‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக்குழுவை அமைத்து, அதில் கிடைத்த வருமானம் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவியது, நாடக உலகிலிருந்து திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தியது, ஒரு கொலைவழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்தது, அழுதுகொண்டே மற்றவர்களைச் சிரிக்க வைத்தது _ இப்படி என்.எஸ்.கே.யின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவைபடத் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் செவல்குளம் ‘ஆச்சா’. எளிய நடை, அரிய தகவல்கள் _ இதுதான் இந்த நூலின் சிறப்பு. என்.எஸ்.கே., பொதுவுடைமை சிந்தனையை வரவேற்றார்; ‘காந்தியக் கொள்கை இந்தியாவுக்கும், சுயமரியாதைக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் தேவை’ என்று கூறினார். தன்னுடைய வாழ்விலும் இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்தவர் என்பதை இந்த நூல் விளக்கிச் சொல்லும். என்.எஸ்.கே_வைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
