book

மகாகவியின் பாஞ்சாலி சபதம்

Mahaakaviyin Paanjchali Sabatham

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

மகாகவி பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் வரிசையில் 'பாஞ்சாலி சபதம்' ஓர் சிறப்பிடம் பெறுகிறது. தனது 'வழி வழி பாரதி' எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முது முனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் கூறுவதாவது: "மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று போற்றப்படுகிறது. மறை நான்கொடு ஐந்து என்று நிலை நிற்பது 'மகாபாரதம்' என்று வில்லிபுத்தூர் ஆழ்வார் அறிவிக்கிறார். இவ்விதிகாசத்தின் முக்கியப் பகுதி 'பாஞ்சாலி சபதம்'. பெண்களைத் தாதர் என்று கருதி அவர்களுக்குக் கொடுமை இழைக்கும் சமூகத்தைச் சுட்டெரிக்கப் பாஞ்சாலி சூளுரைக்கிறாள். அவள் உரைத்த சபதத்தை நிறைவேற்றித் தந்தவன் கண்ணன். இதனை இந் நானிலம் அறிந்து பயனுறுதல் வேண்டுமென்று எண்ணி மகாகவி செயல்பட்டதால் அவர் திருவாயினின்றும் 'பாஞ்சாலி சபதம்' உருப்பெற்றது". புதுச்சேரியில் ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்த நாளில், ஒருநாள் மகாகவி பாரதியார் தனது இளைய மகள் சகுந்தலாவுடன் உப்பளம் தேசமுத்துமாரி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலுக்குள் இருவரும் நுழைந்தனர். அங்கிருந்த சிலாரூபங்களைக் காட்டி சகுந்தலா இவர்களெல்லாம் யார் என்று கேட்க, பாரதியார், இவன் தான் பீமன், இவன் தான் அர்ச்சுனன் என்றும் அவைகளைப் பற்றி கூறிவந்தார். அங்கிருந்த பெண் சிலையைக் காட்டி இது யார் என்று கேட்க, இதுதான் திரெளபதி என்று விடையளித்த பாரதியிடம் பாப்பா, எனக்கு இவர்களைப் பற்றிய கதையைச் சொல்லுங்கள் என்றவுடன், பாரதி திடீரென்று மெளனமாகி விட்டார். அவர் மனதில் மகாபாரதக் கதையும், பாஞ்சாலியின் சபதமும் ஆக்கிரமித்துக் கொண்டது போலும். பாஞ்சாலி சபதம் அவர் மனதில் நிழலாடத் தொடங்கி விட்டது. அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். இதன் பொருள், பாரதியை அப்படியே அள்ளி எடுத்து இன்றைய தலைமுறையால் வாசித்து புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதல்ல. குறிப்பாக, பாஞ்சாலி சபதத்தின் அற்புத அழகையும் பொருள் சுவையையும் முழுமையாக உள்வாங்கவேண்டுமானால் இன்று புழங்கும் நடையில் எழுதப்பட்ட ஓர் உரை அவசியமாகிறது. இந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுதான். மாணவர்கள் தொடங்கி மூத்தவர்கள் வரை அனைவரும் புரிந்து-கொள்ளும் வகையில் பாஞ்சாலி சபதம் பாடல் வரிகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேகமான உரை விளக்கம் இதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அழகுக்கு அழகும் எளிமைக்கு எளிமையும் கூட்டும் இந்த அரிய முயற்சி அனைவரையும் கவரப்போவது உறுதி. வியாச, வில்லி பாரத மூலங்களிலிருந்து மேற்கோள்களுடன்! ஹரி கிருஷ்ணன் யாப்பிலக்கணம், திருக்குறள், சங்க இலக்கியம், எதுவானாலும் சுவாரசியமாக, ஒரு கதைசொல்லியின் நிதானத்துடன் எழுதும் ஹரி கிருஷ்ணன் பிறவிக் கவிஞர். மதுரை பாரதி யுவ கேந்திராவின் ‘பாரதி புரஸ்கார்’ விருது, சென்னை ஸ்ரீ அன்னை சக்தி யோகாலயத்தின் ‘செந்தமிழ் இலக்கிய வித்தகர்’ பட்டம் மற்றும் சென்னை வைஷ்ணவ மஹா சங்கத்தின் ‘ஸ்ரீவைணவ நூலாசிரியர்’ பட்டம் பெற்றவர்.