book

மருதுபாண்டிய மன்னர்கள்

Maruthupaantiya Mannarkal

₹950
எழுத்தாளர் :மீ. மனோகரன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :824
பதிப்பு :3
Published on :2020
Add to Cart

முகவை மீனாட்சி சுந்தரம் இலக்குமி தம்பதியினரின் மூத்த மகனாக 28.5.1932 அன்று சிவகங்கையில் பிறந்த இந்நூலாசிரியர் கல்வி, கற்றது, முகவை அரசர் மேல்நிலைப் பள்ளியிலும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும். 'தென் அமெரிக்காவின் சோழர்கள் "கிழவன் சேதுபதி' ஆகிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆசிரியர்; மொழி பெயர்ப்பாளர். வெல்சின் இராணுவ நினைவுகள்): தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியல் களஞ்சியக் (Encyclopaedia) கட்டுரையாளர். மானிடவியல், வரலாறு. இலக்கியத்திறன், நூல் திறனாய்வு குறித்த , இவரது கட்டுரைகள் கலைக்கதிர், அணுக்கதிர், முத்தாரம், திராவிட நாடு, ஆராய்ச்சி. அன்னம் விடுதூது, ஓம்சக்தி, கவி SIPAN. KURAL.. ) (NERLL, ITTCRIT, INDIAN EXPRESS ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. பல தொல்லியல் வரலாற்றுக் கருத்தரங்குகளில், 'மருதுபாண்டியர்கள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். நீதி த்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நூலாசிரியர் 2001 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய வரலாற்று ஆய்வை தனிமனிதனாகச் செய்திருக்கும் ஆசிரியரின் உழைப்பை இந்நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் படிப்பவர்கள், உணர முடியும். 'மருதுபாண்டிய மன்னர்கள் தமிழில், வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் முதன்மையான நூல் மட்டுமல்லாது வரலாறு எப்படி எழுதப்பட வேண்டுமென்பதற்கு வழிகாட்டியுமான நூல். மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.இன்றைய விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும், அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 ஏப்ரல் 20 இல் சின்ன மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார். இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.