book

யவன ராணி (பாகம் - 2)

Yavana rani(paagam - 2)

₹319.5₹355 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :616
பதிப்பு :59
Published on :2021
Out of Stock
Add to Alert List

யவன ராணி, பூவழகி-இவர்களின் அழகைப் பற்றியும் இளஞ்செழியன் வீரத்தைப்பற்றியும் இலி.ஆஸுவின் பயங்கரத்தைப்பற்றியும், டைபீரியஸின் கடமை உணர்ச் சியைப் பற்றியும் மற்றும் பலப் பல அம்சங்களைப் பற்றியும் அவ்வப்பொழுது பாராட்டுக் கடிதங்களை எழுதினார்கள். "கதையை இப்படித் திருப்பினால்தான் சரியாயிருக்கும்" என்று குக்கிராமங்களிலிருந்து கடிதம் எழுதி யோசனை சொன்னவர்கள் உண்டு. யவன ராணி மாண்டுவிடுவாள் என்பதை முன்கூட்டியே அறிந்து, "எங்கள் ராணியைக் கொல்ல வேண்டாம்" என்று தடுத்தவர்கள் உண்டு. முன் பின்னாக ஏதாவது கதையில் வந்திருப்பதாகத் தெரிந்தால், அந்த முரண்பாட்டை எடுத்துக் காட்டியவர்களும் உண்டு. வாசக அன்பர்கள் எழுதிய ஒவ்வொரு கடிதமும் எனக்கு எழுத உற்சாகமூட்டியது. அவர்கள் அன்பு என்னை ஆட் கொண்டது; என் பேனாவுக்கு வலுவூட்டியது. சிந்தனையைத் துரிதப்படுத்தியது.