book

மருந்து வாங்கப் போறீங்களா?

marunthu vaankap poorinkalaa?

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.க. இளம்பாரதி
பதிப்பகம் :நல்வாழ்வு பதிப்பகம்
Publisher :Nalvaalvu Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :126
பதிப்பு :2
Published on :2012
Out of Stock
Add to Alert List

சமீபத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் போலி மருந்துகள் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. இன்றைய காலகட்டத்தில், எல்லாவற்றிலும் கலப்படம், போலிகள் உருவாக்கப்படுவதைத் தடுப்பது என்பது நிச்சயம் முடியாததாகிவிட்டது. ஆனால், உயிரோடு தொடர்புடைய மருத்துவத்துறையில் மருந்துகள் தயாரிப்பில் போலிகள் உருவாவதுதான் அதிர்ச்சியான விஷயம். அந்தவகையில், 1) இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் என்னென்ன? 2) மருந்துச் சந்தையில் இருக்கும் போலி மருந்துகள் என்னென்ன? 3) மருந்து வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டி விஷயங்கள் என்னென்ன? 4) ஒரு மருந்தினால் எத்தனை வகையான எதிர்மாறான விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படும்? என்பது உள்ளிட்ட மருந்துகள் குறித்து பல விஷயங்களை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. மேலும், நீங்கள் பயன் படுத்தும் மருந்து உங்களுக்கு, தீராத பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால் நீங்கள் யாரை, எப்படி, எங்கு அணுக வேண்டும் என்பதையும் புகார் மனுவுடன் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது.