book

தியானமற்ற தியானம்

Thyanamatra Thyanam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகஸ்தியபாரதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :72
பதிப்பு :4
Published on :2008
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி
Add to Cart

தியானம் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால் 'தியானமற்ற தியானம்' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகஸ்தியபாரதித இப்படியொரு புது பயிற்சியை உருவாக்கியிருக்கிறார்.

'எந்த செயலைச் செய்கிறோமோ அந்தச் செயலில் ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் முழுமையாக ஈடுபடுத்தி நிறைவேற்றுவதாகும் இந்தப் பயிற்சி" என்ற அகஸ்தியபாரதி, தொடர்ந்து, "இந்தப் பயிற்சியில் தியானத்துக்குத் தேவைப்படுவது போல் நேரம், இடம், தனிமை வேண்டியதில்லை.  உதாரணமாக எழுதுவது என்ற செயலின்போது பேனாவை எடுப்பது, திறப்பது, எழுதுவது என்று அத்தனை கவனமும் அந்தப் பேனாவின் மீதே இருக்க வேண்டும். அப்போதுதான் கான்ஸன்ட்ரேஷன் முழுமையாக கிடைக்கும்.  இந்தப் பயிற்சியில் டென்ஷன் குறைகிறது. ஆயுள் நீடிக்கும், ஹார்ட் அட்டாக் வராதும என்றுசொல்லும் அகஸ்தியபாரதி மதுரையில் இருக்கும் பல பள்ளிகளுக்குச் சென்று இலவசமாய் சொல்லிக்கொடுக்கிறார்.

நன்றி:  ஆனந்தவிகடன்