book

சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்)

Aan Pen Anga Ilakanam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. மணிவண்ணன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :70
பதிப்பு :7
Published on :2008
குறிச்சொற்கள் :சாஸ்திரம், கற்பனை, சிந்தனை, கனவு 
Add to Cart

 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று நாம் அடிக்கடி சொல்வதெல்லாம் சாஸ்திரத்தின் ஆதாரத்தைக்கொண்டு உருவான பழ
மொழியை ஒட்டித்தான். அழகாக இருக்கும் அத்தனை பொருட்கள் மீதும் ஆசைப்படுகிறோம். அடைய விருப்பம் கொள்கிறோம். நாய், பறவை இன்ன பிற விலங்குகள் அத்தனையுயையும் உருவம், குணங்களை வைத்துதான் ஆராதிக்கிறோம். நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பழைய ஞாஸ்திரங்களில் இன்றும் தள்ளி வைக்காத  பல உண்மைகள் புதைந்துதான் கிடக்கின்றன. அதில் ஒன்று இந்த சாமுத்திரிகா சாஸதிரம். உலகத்தின் தொன்மை வாய்ந்த நம் பாரத தேசத்தில் புராதன இலக்கண நூலாக நின்று நிலவுகிறது 'சாமுத்திரிகா இலக்கணம்'. ஆடவர் , மங்கையரிடம் அழகு மட்டும் இருந்தால் போதாது. அவர்களின்  குணம் எப்படி? என்று நாம் வினவுகிறோம். குணத்தைத் தெரிந்த பிறகுதான் கொள்ள ஆசைப்படுகிறோம். இப்படி அங்கங்களில், குணங்களில்  எப்படித் தேர்ச்சி பெறுவது, அதைத் தெரிந்து கொள்ள இந்நூல் வழிகாட்டும். நூலில் ஆண்களின் அங்க இலக்கணம், பெண்களின் அங்க இலக்கணம் ,பொது விஷயங்கள்  என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின்  பல பகுதிகள் எழுத ஊன்று கோலாக இருந்து கையெழுத்துப் படியினை திருத்தம் செய்து கொடுத்த பல்கலைச் செல்வர் பாவலர் த. விவேகானந்தம் அவர்கட்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

                                                                                                                                              - வீ. மணிவண்ணன்.