book

டென்ஷனிலிருந்து விடுபட...

Tensionil Irunthu Vidupad..

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகஸ்தியபாரதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி
Add to Cart

உலகில் உள்ள அனைவரும் பல்வேறு குணங்களில் வாழ்ந்து கொண்டு தனித்துவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த
தனித்துவம் முழுமையாக நேர் மறையாக மிளிர வேண்டுமென்றால், அவர்கள் சிறந்த  புதுமையான, அதே நேரத்தில் மற்றவர்கள்
ஆச்சர்யம்  அடையத்தக்க படைப்புத்திறன் உள்ளவர்களாக இருந்தாக வேண்டும். தன்முனைப்பு என்பதை ஞானிகள் கூட கழற்றி விடுவது கடினம். ஏனென்றால் அது முழுவதும் அகன்ற நிலையை ஒருவனை புழுங்கலாக ஆக்கிவரும். எனவே தன்முனைப்பை சரியான திக்கில் செலுத்தும் போது அது சமூகத்திற்குப் பயனுள்ள செயலாக மலர்ந்து விடுகிற வாய்ப்புகள் அதிகம்.  பொய்யான அகங்காரம் தவறான மிடுக்காகவும் ,கவர்ச்சி நிறைந்ததாகவும்  கூட இருக்கும். நம்மிடம் இருக்கும் அகங்காரம் அதிகம் என்பதனால் அது நம்மை எளிதில் ஈர்த்து வசியம் செய்து வருகிறது. நம் மனம் தகவல் நோக்கிய மனம் , பணம், பதவி, பட்டம் , படிப்பு போன்ற அனைத்துமே தகவல்கள். அவை ஒருபோதும் நம்மை அடையாளப்படுத்த முடியாது. தகவல்களிலேயே தலைவைத்துத்தூங்கும் ஒருவனுக்கு அவற்றைத் தாண்டிப்போக முடியாது. நாம் நம்முடைய மனத்துக்குப் பெரும்பாலும் வாயிற்காவலர்களாக இருக்கத்தான் விருப்பப்படுகிறோமே தவிர அதற்கு அரசர்களாக ஆக அவற்றின் மையத்திற்குள் நாம் பிரவேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

                                                                                                                                              இறையன்பு, I,A,S.