book

வென்றிடப் பிறந்தவள் பெண்

Vendrida Piranthaval Penn

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராசி அழகப்பன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

வாழ்க்கையின் துவக்கம் பெண் எனும் தாய்மை. நேர்மையாய் சொல்ல வேண்டும் என்றால் அன்பும், அரவனைப்பும் பிழைபடாமல் ஆயுள் காலம் வரை தரும் அழகிய கோயில். அவர்களிடம் உள்ள ஒப்பற்ற திறமையை எடுத்துச் சொல்லும் விதமாகவே இந்நூல் என்னால் எழுதப்படுகிறது. பெண்ணிடமுள்ள கூர்மையான அறிவுத் திறனையும், ஆளுமைத் தன்மையும் எவ்வாறு ஒருங்கிணைத்தால் வாழ்க்கை மேம்படும் என்பதை மனதில் பதிந்த மாசற்ற வாசங்களால் இங்கு பதிவு செய்துள்ளேன். பெண் கட்டிலறைக்கும் சமையற்கட்டுக்கும் ஓடியே ஓய்ந்து போகிறாள். என்று என் முதல் கவிதைத் தொகுதியில் நானெழுதியதும் இப்போது நினைவுக்கு வருகிறது. பாரதியின் கனவும்,  பாரதிதாசனின் குடும்ப விளக்கும் பெண்களை புரிந்து கொள்ளுதலில் இருக்கிறது. பெண்களின் உயர்வுகளில் உள்ள மகிழ்ச்சி சமூகத்தின் ஒட்டுமொத்த உயர்வு  எனக் கருதுகிறேன். இந்நூல் பெண்களுக்கானதும், பெண்மையை உணர நினைப்போர்க்கும் உதவும்  கருவியாக  அமையும். இந்நூல் சிறப்புற வெளி வருவதற்குக் காரணமான கற்பகம் பத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்களுக்கும் ,ஓவியர் ஜானி அவர்களுக்கும் , கலைக்கணினியகம் தமயந்தி கலைவாணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வ நன்றி.

                                                                                                                                            அன்புடன் ராசி.அழகப்பன்.