book

கிச்சன் மருந்து

Kitchen Marunthu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சித்தானந்தா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :12
Published on :2009
ISBN :9788184761429
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை தலைகீழ்! மனிதர்களை நோய்களின் தொல்லையிலிருந்து காக்க சிவபிரான் அருளிய மருத்துவ முறையாகக் கருதப்படுவது 'சித்த மருத்துவம்'. மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் தன்வந்திரி அருளியதாகக் கருதப்படும் மருத்துவ முறை 'ஆயுர்வேதம்'. இவற்றின் கலவையாக உருவானதுதான் பாட்டி வைத்தியம் என்ற நம் பாரம்பரிய வைத்தியம். சாதாரணமான தலைவலி, உடல் வலி என்றாலே பலரும் நாடுவது ஆங்கில மருந்து மாத்திரைகளை. ஆனால் மேலைநாடுகளிலோ மக்கள் அதிகம் விரும்புவது மூலிகைப் பொருட்களாம்! அங்கே நம் சித்த, ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறதாம். சில ஆங்கில மருந்துப் பொருட்களே, மூலிகைகளிலிருந்து வேதி முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. ஒன்றுமில்லாத பிரச்னைக்குக்கூட ஓராயிரம் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை, மருந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு முறைகளிலும் சொல்லப்படும் மருத்துவப் பொருட்களான வாசனைத் திரவியங்கள், மளிகைப் பொருட்கள், காய் வகைகள், பழ வகைகள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் மருத்துவ குணங்களை சுவாமி சித்தானந்தா என்ற பெயரில் இந்நூலில் தொகுத்து அழகாகத் தந்துள்ளார் நூலாசிரியர் தி.முருகன். சாதாரண உடல் உபாதைகளுக்கு நம் வீட்டு சமையல் பொருட்களே நல்ல மருந்துப் பொருட்களாக இருக்கிறது என்பதைக் கூறுவதோடு, சமையலுக்காக அஞ்சறைப்பெட்டியில் அடங்கியிருக்கும் பொருட்களை மருத்துவத்துக்கு எப்படி பயன்படுத்துவது; எந்த நோய்க்கு எதை பயன்படுத்துவது; எத்தனை வேளை எடுத்துக் கொள்வது போன்ற மருத்துவ முறைகளை, மருந்துக்குக்கூட கசப்பு சேர்க்காத வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். 'பாட்டி வைத்தியம் என ஒதுக்கலாகாது' என்று, ஆள்காட்டி விரல் நீட்டி, நமக்குச் சுட்டிக் காட்டுவது இந்த நூல்.