book

தெய்வக் குரல்

Theivak Kural

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அறிவாலயம்
Publisher :Arivalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

திருவிழாக் கோலம் பூண்டிருந்த ஊரின் மத்தியில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி, தன் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதன் ஒலியையும் மீறி, வளையல் கடையருகே நின்றிருந் ஓர் எழிலரசியிடம் இருந்து வெளிப்பட்ட, ஒளி, வேல்பாண்டியனை ஏடாகூடமாய் தாக்க, ''எடேய்... மொக்கராசு, அந்த கத்திரிப்பூ சாக் கெட்டு போட்டிருக்க செவத்த குட்டி யாருடே? நம்மூரு புள்ள மாதிரி தெரியலையே..." என்றான் அவன், அப்பெண்ணிடமிருந்து பார்வையை விலக்காமல். "ஆத்தாடி... அது நம்மூரு புள்ள இல்ல சாமி! அசலூரு... நம்ம எட்டக்கப்பட்டி தேவராசு அய்யா வோட சம்முசாரம்ங்க..." - பதிலுரைத்த எடுபிடியின் குரலில் தென்பட்ட நடுக்கம் கலந்த எச்சரிக்கையே, பெண் பெரிய இடம் என்பதை வேல்பாண்டியனுக்கு எடுத்துக் காட்டியது. அடுத்தவன் பொண்டாட்டி என்று தெரிந்தவுடன், .கண்ணை எடுத்து விட்டால் அவன் மைனர் * அல்லவே! மற்றவன் சொத்து எனத் தெரிந்ததும் தான், வேல்பாண்டியன் கண்கள் இன்னும் இன்னும் ஆசையுடனும் காமத்துடனும் அப்பெண்ணை மேய்ந்தது.