கவர்னர் பெத்தா
Governor Betha
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீரான் மைதீன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789352440764
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cartஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப்பதே மீரான் மைதீனின் கதைகள்! மனிதர்களை விட்டுச் செல்ல முடியவில்லையென்றால், நாம் மண்ணைவிட்டும் செல்ல முடியாது. மண்ணும் மனிதர்களுமாகக் கலந்து கட்டும்போது ஒளிர்கிற அன்பை - நேயத்தை ஓர் இலக்கியம் சுடராக நம் முன்னே கொண்டுவந்து கொட்டுகிற எழுத்துகள் மீரானுடையவை. “பார் இவ்வுலகை! பார் அதன் இன்பத்தை!” என்று சொல்வதற்கான கலை நயம் என்னவாக இருக்க முடியுமோ, அவ்வாறே இருந்துவிட்ட சில கதைகளின் தொகுப்பு இது. -களந்தை பீர்முகம்மது