வரம் தரும் வசந்தமே
Varam Tharum Vasanthame
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா மணிவண்ணன்
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :428
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
இரவில் எப்பொழுதும் இந்த மாதிரி அரதப் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டு தூக்கம் வரும்வரை படுத்திருப்பான் ஆகாஷ். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் ரசித்துக் கேட்பான் அந்தப் பாடல்களை. தூக்கம் வரும் நேரம் அவனுக்கே தெரியாது. நிம்மதியான தூக்கம் அவனை விட்டு மிக தொலைவில் சென்று நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நெஞ்சில் நந்தன் கணக்க அவனை விலக்கி படுக்க வைத்தான். நந்தன் அவனுடைய அக்கா அனிதாவின் மகன். அவளுடைய முதல் கணவனுக்குப் பிறந்தவன். இப்போது அவள் கணவன் உயிருடன் இல்லை. திருமணமான இரண்டே மாதத்தில் ஒரு விபத்தில் உயி ரிழந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவளுக்கு மறுபடியும் ஒரு திருமணமானது. யாருக்கும் பிடித்த மில்லாத திருமணம் ஏனென்றால் திருமணமான ஒரு வருடன் மறுதிருமணம். அவர்களுக்கு எட்டு மாதமே யான அக்ஷரா என்ற மகள் இருந்தாள். அனிதாவின் கணவர் அண்ணாமலை வசிப்பது அவ ருடைய முதல் மனைவி தேவிகாவுடன். மாதமொரு முறை இங்கே வந்து போவார். அவன் படுக்க வைத்து ஓரிரண்டு நிமிடங்களிலேயே நந்தன் மீண்டும் அவன் மேல் ஏறி படுத்துக் கொண்டான்.