book

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)

Manase Relax Please (part 1)

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :192
பதிப்பு :43
Published on :2016
ISBN :9788189780609
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Add to Cart

பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!' சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத், இப்போது சுகபோதானந்தா.

இருபது ஆண்டுகால சந்நியாச வாழ்க்கை, சுவாமி சின்மயானந்தா, தயானந்த சரஸ்வதி என்று ஆரம்பித்து பலரிடம் சீடராக இருந்தார். ஆரம்ப காலத்தில் ஞானப் பசியோடு இமயமலைச் சாரலில் வருடக்கணக்கில் திரிந்தது உண்டு. எம்.ஏ. (தத்துவ இயல்) முடித்துவிட்டுத் துறவறம் பூண்டபோது இருபத்தைந்து வயது. இப்போது நாற்பது! ஓய்வு கிடைக்கும்போது அரை நிஜாருட‌ன் பாட்மிட்ட‌ன் விளையாடுகிறார். மாருதி எஸ்டீம் காரை தானே ஓட்டுகிறார். அமெரிக்கா, க‌ன‌டா, ஆஸ்திரேலியா, ஜெர்ம‌னி என்று விமான‌த்தில் நாடு நாடாக‌ப் ப‌ற‌ந்து இவ‌ர் கொடுக்கும் லெக்ச‌ர் எல்லாமே ம‌ன‌ அமைதி ப‌ற்றிய‌வைதான்.

'பிர‌ச்னைக‌ளை உத‌றி க‌ண‌வ‌ன் _ ம‌னைவி அமைதியான‌ இல்ல‌ற‌ம் ந‌ட‌த்துவ‌து எப்ப‌டி?' என்று ஒரு வொர்க்_ஷாப் ந‌ட‌த்த‌த் திட்ட‌மிட்டார் சுக‌போதானந்தா. பெங்க‌ளூரில் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌ வொர்க்_ஷாப்புக்குப் ப‌ய‌ங்க‌ர‌ எதிர்ப்பு! 'துற‌வ‌ற‌ம் பூண்ட‌ ஒரு ம‌னித‌ர் இல்ல‌ற‌ம் ப‌ற்றி லெக்ச‌ர் கொடுப்ப‌தா?' என்று ஒரு கோஷ்டி மிர‌ட்ட‌ல் விடுக்க‌... அவ‌ர்க‌ளைச் ச‌ந்தித்தார் சுவாமிஜி.

'காம‌சூத்ரா' எழுதிய‌ வாத்ஸ்யாய‌ன‌ர்கூட‌ ஒரு துற‌விதான். நான் வாத்ஸ்யாய‌ன‌ர் அல்ல‌. இருந்தாலும் 'வாழ்க்கை முடிந்த‌ பிற‌கு என்ன‌?" என்ப‌தைவிட‌, ம‌னித‌ வாழ்க்கைக்கு உள்ளே இருக்கும் சூட்சும‌ங்க‌ளைப் போதிப்ப‌துதான் ஒரு ந‌ல்ல‌ துற‌வியின் க‌ட‌மை!" என்றார். அப்ப‌டியும் எதிர்ப்பாள‌ர்க‌ள் ச‌மாதான‌ம் ஆகாததால், ப‌ல‌த்த‌ போலீஸ் பாதுகாப்புக்கு ந‌டுவே திட்ட‌மிட்ட‌ப‌டி வொர்க்_ஷாப்பை ந‌ட‌த்தி முடித்தார் இவ‌ர்.

'கோப‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து எப்ப‌டி?' 'ம‌ன‌ச்சோர்விலிருந்து விடுப‌டுவ‌து எப்ப‌டி?'

இப்ப‌டி ச‌ராச‌ரி ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌தில் தோன்றும் 'எப்ப‌டி'க‌ளுக்கெல்லாம் ப‌தில் சொல்வ‌துதான் சுவாமி சுக‌போதான‌ந்தா அளிக்கும் 'லெக்ச‌ர்'க‌ளின் நோக்க‌ம்! அவ‌ருடைய‌ எண்ண‌ங்க‌ளின் ஒரு தொகுப்புதான் 'ம‌ன‌சே ரிலாக்ஸ் ப்ளீஸ்'. இதை புத்த‌க‌மாக‌ வெளியிடுவ‌தில் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன்.