பாரம்பர்ய வீட்டு வைத்தியம்
PaaramParya Veetu Vaithyam
₹323₹340 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீஹரி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :383
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184766950
Add to Cartநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டுவரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பர்யமான பொருட்களைக் கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது இந்த நூல். வீட்டு வாசலில் முளைத்திருக்கும் கீழாநெல்லி முதல், வீட்டு முற்றத்தின் துளசி தொடங்கி, தோட்டத்தின் காய்கறிகள், அடுப்பறை அஞ்சறைப்பெட்டியின் மிளகு, சீரகம், மஞ்சள் வரை அனைத்துமே மூலிகையாகவும் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும், அது மனிதனுக்கு நோயற்ற வாழ்வை அளிக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் உபாதைகளையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் போக்கும் வழிகளையும் எளிய முறையில், அனைவரும் பயனடைந்து ஆரோக்கியம் பெறும் வகையில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். விரும்பி உண்ணக்கூடிய காய்கறிகளைவிட நாம் ஒதுக்கும் காய்களில்தான் மருத்துவக் குணங்கள் ஏராளம் புதைந்து கிடக்கின்றன. முள்ளங்கி என்றாலே சிறியோர் முதல் பெரியோர் வரை ஓட்டம்தான். ஆனால் அதன் வாசமும் காரலுமே உடல் உறுப்பு நலன் அழியாமல் காத்து, சிறுநீரகத்தை சீரடையச் செய்கிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையினால் உண்ண மறுப்பது அவற்றின் ஆரோக்கியத்தையும் சேர்த்து ஒதுக்குவதாகும். காலங்களுக்கு ஏற்ப நோய்களும் மாறுகிறது. எத்தனை புதிய புதிய நோய்கள் வந்தாலும் அதை, நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக்கூடிய அஞ்சறைப்பெட்டி பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம் என்பதை உடையாடல்கள் மூலம் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலின் கூடுதல் சிறப்பாகும். ஆனந்த விகடனில் 1955, 56-ம் ஆண்டுகளில் ‘வீட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வெளியான மருத்துவக் குறிப்புகள், வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றதோடு, பல்வகை நோய் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வாக அமைந்தது. அந்த மருத்துவக் கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பும் நூல் வடிவில் இப்போது உங்கள் கைகளில்! எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள இந்த வைத்திய முறைகளை எளிதில் கையாண்டு ஆரோக்கிய வாழ்வை உறுதியாக்கிட, உங்களுக்கு இந்த நூல் வழிகாட்டும்