book

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்

Maram Valarpoam Panam Peruvoam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகடன் பிரசுரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :94
பதிப்பு :12
Published on :2016
ISBN :9788184761122
குறிச்சொற்கள் :வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி
Out of Stock
Add to Alert List

பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! 'வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்' என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? 'அப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..?' என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் _ 'மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்!' தற்போது, விவசாயிகளிடையே 'மரப்பயிர் வளர்ப்பு' என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், 'பசுமை விகடன்' இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.