book

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

Paandi Naattu Paingiligal

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. மோகன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788192882970
Add to Cart

முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. இளம் தென்றல் காவேரி நதி வழியாக மென் குளிருடன் மதுரை நகர் முழுவதும் வலம் வந்து எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. ஆனால் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியோ பஞ்சணையில் உறக்கம் வராமல் தவிப்புடன் புரண்டு கொண்டிருந்தாள். அவளது பட்டு மேனி முழுவதும் தக தக என்று கனல் போன்று எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் மனம் அலை பாய்ந்து நிலை கொள்ளாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

துயில் கொள்ள முற்பட்ட அந்த மயில் நடையாளுக்கு தனது தவிப்புக்குக் காரணம் தன் மனதில் எற்பட்டிருந்த மையலே என்று புரியவே செய்தது. ஆனால் என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தாள். அவளது மனம் சென்ற சில நாட்களில் நடந்த இனிய நிகழ்ச்சிகளை அசை போட்டு அந்த நினைவுகளில் பெருமூச்சுடன் பயணம் செய்யத் தொடங்கியது.

பாண்டிய நாட்டு மன்னன் சுந்தர பாண்டியனின் ஒரே மகள் நந்தினி தேவி. அவளது எழில் காணும் எவரையும் கவர்ந்து விடும் கொள்ளை அழகுடன் திகழ்ந்தாள். அவளது பருவச் செழிப்புகளும் வளைவு நெளிவுகளும். வனப்புடன் திளங்கிய மேனியும் காண்பவரை மயக்கிவிடும்.