
கோவை மாவட்ட வழக்குச் சொல் அகராதி தொகுதி 1
Kovai Mavatta Vazhakku Sol Agarathi Part 1
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. மகாலட்சுமி
பதிப்பகம் :பாடுமீன் பதிப்பகம்
Publisher :Paadumeen Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2003
Add to Cartமுதன்முதலில் ‘வட்டார வழக்குத் தமிழகராதியை, பெஸ்கி தொகுத்ததாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து ஏதும் அறிய இயலவில்லை. எனினும், இவர் தொகுத்த வட்டார வழக்குத் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் கூறும் தமிழ் லத்தீன் அகராதி ஒன்று 1882 இல் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வட்டார வழக்குச் சொல்லகராதி தயாரித்தவர் கி. ராஜநாராயணன். இவர் ‘வட்டார வழக்குச் சொல்லகராதி' என்ற பெயரில், நெல்லை மாவட்டச் சொற்களுக்கு 1982 ஆம் ஆண்டு அகராதி வெளி யிட்டுள்ளார். அகரநிரலில் அமைக்கப்பட்டுச் சொல்லுக்குப் பொருள் இவ்வகராதியில் கூறப்பட்டுள்ளது.
இவ்வட்டார வழக்குச் சொல்லகராதியில், சொற்கள் அகரநிரலில் வழங்கும் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள், ஒரு சொல்லுக்குப் பல பொருள் கொடுக்கப்பட் டுள்ளன. ஒரே சொல் ஒரே பொருளில் பலவாறு உச்சரிக்கப் படுதல், ஒரு பொருளுக்கு வழங்கும் வேறுபல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர், வினை, அடை, இடை ஆகிய இலக்கணச் சொல் வகைகள் காட்டப்பட்டுள்ளன. தேவைப் படும் இடங்களில் மேற்கோள்களும் பழமொழிகளும் தரப் பட்டுள்ளன. 'சொற் களஞ்சியமாக விளங்கும் இவ்வட்டார வழக்குச் சொல்லகராதி, மேலும் பல மாவட்ட, வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தோன்றுவதற்கு வழிகாட்டலாம். பதினெட்டாம் நூற்றாண்டு முதல் பல்வகையான அகராதிகள் பெருமளவில் தோன்றிக் கொண்டிருப்பினும், வழக்குச் சொல் லகராதியின் வளர்ச்சி தொடக்க நிலையில் தான் உள்ளது.
