book

வாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும்

vaazhkkaik kalviyum paaliyal vzhippunarvum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கோ. தங்கவேலு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

திருக்குறள் காமத்துப்பாலுக்கும், வடமொழியாளரின் காமநூல்களுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. இரண்டையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் பரிமேலழகர் தோற்பதைக் கண்டு வருந்தலாம். பண்டைய கூட்டுக்குடும்ப வாழ்வில், பாலியல் தொடர்பான சிக்கல்கள் பலவாக நேர்ந்ததில்லை. இன்றோ மிகுதி. அன்று மணமுறிவுகள் இல்லை. ஒருவரை ஒருவர் பொறுத்தலும் போராடி வெல்லுதலும் வாழ்முறையாக இருந்தது. இன்றோ எளிதாகப் பிரிந்து, உரியவரைத் தேர்ந்தெடுத்து வாழ்வது இயல்பாகிறது. கல்விச்சூழல், பொருளியற் சூழல் வளர்ந்துள்ளதால் மாற்றங்களை ஏற்றுப்பழகும் மனநிலையும் வளர்ந்துள்ளது. கணவன்-மனைவி வேறு வேறிடங்களில், பணி நிலையில் பிரிந்து வாழ்தல், கல்வி கற்றல் முதலிய புதுமைகளால் அமெரிக்க வாழ்நெறி அனைத்து மக்களிடமும் அளாவி நிற்கிறது. தலைமையாசிரியர் தங்கவேலு அவர்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளை, உடல் அமைவுகளை, குடும்பச் சூழலை விளக்கிச் செல்வது இந்நூலை அணிசெய்யும் திறனாகும். இந்தச் சூழலில் பாலியற் கல்வி, பள்ளிக்கல்வியில் ஒரு பாடமாக அமையும் முதன்மை பெறுகிறது. பண்பாட்டு அடிப்படையில் அக்கல்விப் பயிற்சி அமைய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தை நிலைக்களனாகக் கொண்டு நல்லாசிரியர் திரு. கோ. தங்கவேலு இந்த இனிய நூலை அருமையான முறையில் வரைந்திருக்கிறார். இந்நூலைக் கல்வி நிலையில் ஆசிரியர்கள் மாணவர்க்குப் பயிற்று விக்கலாம். தலைமையாசிரியரின் முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறேன்