நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்
Naxalite Ajithavin Ninaivukkurippugal
₹380+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குளச்சல் முகம்மது யூசுப்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380211077
Add to Cartசில கோழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்களைப்போல் தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம் உள்ளவர்களென்றெல்லாம் பிரச்சாரம் செயவார்கள் இதெல்லாம் தவறுகள் என்பதை அவர்கள் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொள்வார்கள். எங்களுடைய சரியான பலம் இருப்பது, கிராமப்பறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புகளாகிய விவசாயப் பெருங்குடி மக்களிடம்தான். இந்த பெரும் சக்தியை நம்பியே நாங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து , வெளிப்படையான ,இந்த ஆயுதப்போராட்டத்தின் கொடியுமேந்தி பரந்து விரிந்து கிடக்கும் நம்முடைய கிராமப்புறங்களுக்கு பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். அங்கே எங்களது விவசாயத்தோழர்களுடன் இணைந்து எதிரிகளை வெல்கிற ஜீவமரணப் போராட்டத்திற்கான சக்தியைத் திரட்டிக் கொண்டு மீண்டும் நாங்கள் ,இந்த இடத்திங்களுக்கே திரும்பி வருவோம். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகங்களும் தேவையே இல்லை. இன்று நாங்கள் தற்போதைக்கு விடைபெறும் வர்க்க சகோதரர்களும் உடன் பிறப்புகளும் குடும்ப அங்கத்தினர்களுமெல்லாம் இதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏஎனன்றால் இந்தத் துவக்கத்தின் எங்களடைய மார்க்க வழிகாட்டியாக மாபெரும் வெற்றியாளனாகிய மாவோ சே துஙகின் சிந்தனைகளிருக்கின்றன.