book

கனவுகளின் பலன்கள்

Kanavugalin Balangal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனுமந்தராயர்
பதிப்பகம் :மோகன் புத்தக நிலையம்
Publisher :Mohan Puthaga Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

சிலர் ஆழ் மன உணர்ச்சியை தியானம், யோகா போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "தான் யார்" என்ற கேள்விக்கு இறைவனின் பரிணாமே நாம் என்ற விடையறிந்து தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றி பிறவி பயனை அனுபவிக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மருத்துவ ரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு கனவு என்பது மன அழுத்தம், மன நோயில் ஆழ்த்தி விடுகிறது. இரவில் தூங்கச் செல்லும் போது என்ன சிந்தனையில் இருக்கிறோமே அது தொடர்பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. கனவுகள் பலருக்கு மன பாரத்தை குறைக்கும் வடிகாலாகவும் இருக்கிறது.

கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்து செல்கிறது. இதனைப்பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்து வந்த ஜென்மத்தின் நிகழ்வுகள் கூட ஞாபகம் வரும். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகு அந்த கனவுகள் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்க இருப்பதை முன்னரே உணர்த்தும்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்தைப்போலவே நினைவில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால் பின்னால் நடக்கப் போவதை முன்னமே கனவு மூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். சில புரியாத புதிர்களை பலமுறை சிந்தனை செய்தும் மற்றும் முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாக கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணர வைக்கும்.

அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வுமனப்பான்மையும் கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றி வீரனாக நினைத்து கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப்போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவுகளை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக்கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.